சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயலமர்வானது அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் 2014.11.13ம் திகதி வியாழக்கிழமை சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.முஹம்மது அமீன் அவர்களது தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் அவர்கள் கலந்துகொண்டார்.
இதில் வளவாளர்களாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.முஹம்மது அமீன், உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.சியாட் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டு சமூக சேவைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள், செயற்றிட்டங்கள், உளவளத்துணையின் முக்கியத்துவமும் பயன்பாடும் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இதில், அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அமைப்புக்கள், மற்றும் முதியோர் அமைப்புக்களின்; தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment