வாழைச்சேனை அல்-ஹிக்மத் கல்வி நிறுவனத்தின் 8வது பரிசளிப்பு விழாவுடன் கல்குடா தொகுதியில் உள்ள முஸ்லிம் சமூக முன்னோடிகளாக பத்து முன்னோடிகள் தெரிவு செய்யப்பட்டு 30.10.2014 வியாழக் கிழமை கல்வி நிறுவனத்தின் தலைவர் AR.முஹைதீன் தலைமையில் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பெரும் விழாவாக எடுக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார்கள்.
SAA எனும் சமூக சேவைகள் அமைப்பின் அங்கமாக செயல்படும் அல்-ஹிக்மத் கல்வி நிறுவனத்தின் பல்வேறு பணிகளில் ஆரம்ப கல்வியை மேம்படுத்தும் செயற்பாடே மிகப் பிரதானமாகும். அதன் பல்வேறு பணிகளில் இவ்வருடம் புதிய நிகழ்ச்சி ஒன்றை சமூகத்தில் உள்வாங்கி செயற்படுத்தும் முகமாக வருடாந்த பரிசளிப்பு விழாவுடன் கல்குடா முஸ்லிம் முன்னோடிகளை கெளரவிகும் மாபெரும் விழாவாக ஏற்படு செய்யப்பட்டு அதன் முதற்கட்டமாக சமூகத்தின் பிரதான முன்னோடிகள் பத்துப் பேர் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மஃஜூத் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொண்டு முன்னோடிகளை கெளரவப் படுத்தியதோடு, கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் MTM.றிஸ்வி அவர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தினார்.
கெளரவிக்கப்பட்டவர்களின் விபரங்கள்….
01. அல்-ஹாஜ் MTM. அப்துல்லாஹ்
(மாகான சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்)
02. அல்-ஹாஜ் MHM.முகைதீன்து
(தலைவர்- முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல், வாழைச்சேனை)
03. அல்- ஹாஜ் M.அச்சி மொஹம்மட்
(தலைவர்-நஹ்ஜதுல் இஸ்லாமியா கலாபீடம், வாழைச்சேனை)
04. ஜனாப் ML.அப்துல் ஸலாம் (தலைவர்- MPCS,, வாழைச்சேனை)
05. ஜனப் ABM.முஸ்தபா (முன்னால்- கல்குடா உலமா சபைத் தலைவர்)
06. அல்-ஹாஜ் M.சுபைர் (முன்னால் பிரதேச உதவி கல்விப் பணிப்பாளர்)
07. ஜனாப், மெளளவி MMM.தாஹிர் (தலைவர்- கல்குடா உலமா சபை)
08. ஜனாப் MSK. றஃமான் (உதவி கல்விப் பணிப்பாளர் மட்டகளப்பு மத்தி)
09. ஜனாப் U.அஹமட் (முன்னால் அதிபர்- அந்-நூர் தேசிய பாடசாலை, வாழிச்சேனை)
10. அல்-ஹாஜ் K.பதுர்தீன் (தலைவர்- நூரியா ஜும்மா பள்ளிவாயல், பிறைதுரைச்சேனை)
இந்நிகழ்ச்சி சமூகத்தின் மத்தியில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுவதனாலும், முஸ்லிம் பிரதேசத்தை உள்ளடக்கிய நிகழ்வு என்பதனாலும், நல்லதை சிந்திப்போம் நல்லவகையாக செயற்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் எதிர்காலத்தில் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள முன்னோடிகள் அனைவரும் பல்வேறு கட்டங்களாக கெளரவிக்கப்பட உள்ளனர் என்பதை அல்-ஹிக்மத் நிறுவனத்தின் பணிப்பாளர் AR.முஹைதீன் தெரிவித்தார்..jpg)
.jpg)
0 comments :
Post a Comment