ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்த லில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்ற தேவையற்ற போலி பிரசாரங்களை செய்து வரும் எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இணையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு எவரேனும் இருக்கின்றாரா என்பதை தெளிவுபடுத்துவது அவசியம் என தெரிவிக்கும் சீனி கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, எதிரணிகளின் எல்லாவித சூழ்ச்சிகளு க்கும் முகம் கொடுத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாகவும் வெற்றி வாகை சூடுவது நிச்சயம் எனவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே மேற்க ண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவது தொடர் பில் அச்சம் கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சி கள் உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் போலியான பிரசாரங்களையும் நீதிக்கு முரணான கருத்துக்களையும் தெரிவிக்கும் முன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இணையாக போட்டியிட எவரேனும் ஒரு வேட்பாளர் இருக்கின்றாரா? என்பதை தெளிவுபடுத்துவது அவசியம்.
நாட்டில் நிலவிய முப்பது வருட யுத்த காலத்தின் போது பல்வேறு சூழ்ச்சி வேலைகளை செய்வதற்கு முயற்சித்த எதிர்க்கட்சி தரப்பினர் அதனை இக்கால கட்டங்களில் செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இத ற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவதி ல்லை. ஆளும் கட்சியில் இருக்கும் தரப்பினர் சிலர் பிரதான எதிர்க்கட்சிக்கு செல் லும் முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவ ரால் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், எமது கட்சிக்குள் எவ்வாறான முரண்பாடுகள் இருந்.தாலும் அது குறித்த தரப்பினருடன் பேசி தீர்மானிக்கப்படும்.
வெறுமனே எதிர்க்கட்சிகளே இவ்வாறான போலி கருத்துக்களை பரப்பி வருகின்றன.
எவ்வாறான முரண்பாடுகள் இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது வெற் றிக்காக உழைத்திடுவோம் என தெரிவித் தார்.

0 comments :
Post a Comment