மூன்றாவது தடவையாகவும் ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் போட்டியிட முடியாது என்பது அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் இருக்கின்றது. இதுதான் எமது நாட்டின் ஜனநாயகமாக இருக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு- – செலவுத்திட்டத்தின் கைத்தொழில், வாணிபம், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்து விட்டதாக கூறி சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு வந்து கடதாசியொன்றைப் பார்த்து வாசித்து விட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு இயலுமை இருக்கின்றது என்ற வகையில் உயர் நீதிமன்
றத்தின் விளக்கத்தினை பாராளுமன்றத்துக் குக் கொண்டுவந்து அது பாராளுமன்றத்தி னூடாக உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அவ்வாறு உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்ற இவ்விடயம் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அது சபாநாயகரூடாக இந்த சபைக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படல் வேண்டும். ஆனாலும் கடதாசி ஒன்றினைக் கொண்டு வந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் என்ற ரீதி யில் வாசித்துவிட்டு சென்றுள்ளார்.
எமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மூன்றாவது தடவை யாகவும் போட்டியிடுவதற்கான இயலுமை இல்லை. எனினும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் அவ்வாறான ஏற்பாடு இருக்கின்றது. இதுதான் இந்நாட்டின் ஜன
நாயகமாக இருக்கின்றது என்றார்.

0 comments :
Post a Comment