முஸ்லிம்களுக்கு ஒரு வரப்பிசமான காலமென்றால் இந்த அரசாங்கத்திலேயே: விளக்கம் கூறும் பிரதமர்!

இக்பால் அலி-

முஸ்லிம்களுக்னெ ஒரு வரப்பிசமான காலமென்றால் இந்த அரசாங்கத்திலேயே கொள்ள  வேண்டும். ஏனென்றால் பாராளுமன்றத்தில் எட்டு அமைச்சர்கள் உள்ளார்கள் என்பதை முஸ்லிம்கள்  உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு முன் இரண்டு பேர் மட்டும்தான் இருப்பார்கள். நாங்கள்  அவ்வாறு இல்லை. 

அரசாங்கத்தினூடாக முஸ்லிம்களுடைய அபிவிருத்திப் பணிகளுக்காக அளவிட  முடியாதளவு செலவுகளைச் செய்து வருகின்றோம் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அக்குரணை நகரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை  இன்று 28-11-2014 பிரதி அமைச்சர் ஏ, ஆர். எம். காதர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.  அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் தி.மு. ஜயரத்தன அங்கு இவ்வாறு இதனைக்  குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

432 முஸ்லிம் பள்ளிகளின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக பெருந் தொகையான நிதிகளை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை புனர் நிர்மாணம் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

முஸ்லிம்கள் தங்களுடைய தனித்துவமான கலாசாரங்களை பேணிக் கொண்டு தமிழ் மொழி பேசினாலும் ஏனைய சமூகத்துவர்களுடைய மொழியிலும் தேர்ச்சி பெற்று சகவாழ்வுடன் பழகக் கூடியவர்கள். அதேபோன்று குர் ஆன் காட்டிய வழியில் அதனை சரியாக பின்பற்றி நடப்பவர்களாகவுள்ளனர். இஸ்லாம் மார்க்கம் ஒரு சிறந்த மார்க்கமாகும்.

முஸ்லிம்கள் பழைய அரசர்களுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். அந்த வகையில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக வெற்றிபெறச் செய்ய தாங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவத்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க, அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் சிம்சான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம். ஆர். எம். அம்ஜாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :