160 மில்லியன் ரூபா செலவில் 40 உள்ளுராட்சி சபைகளுக்கு கழிவகற்றும் கனரக வாகனங்கள்!

ஜே.எம்.வஸீர்-
ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 160 மில்லியன் ரூபா செலவில் 40 உள்ளுராட்சி சபைகளுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை இலகுபடுத்துவதற்காக கழிவகற்றும் கனரக வாகனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் வளாகத்தில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்; அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாகனங்களை வழங்கி வைத்ததன் மூலம் தாம் நீண்ட காலமாக கழிவகற்றலின்போது எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டதாகவும் மேலும், உள்ளுராட்சித்துறையின் வரலாற்றைப் பொறுத்தவரை அமைச்சர் அதாஉல்லா அவர்களின் காலம் அதன் பொற்காலம் எனவும், இக்காலத்திலேயே தமது சபைகளுக்கு அதிக அபிவிருத்திக்கான பணங்கள், டபள்கெப் வாகனங்கள் கிடைத்ததாகவும், அதுமட்டுமன்றி மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாகவும், மற்றும் ஏனைய இயந்திர வசதிகள் கிடைத்ததாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட உள்ளுராட்சி 
சபைகளின் தலைவர்கள் தெரிவித்ததுடன் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அமைச்சர் அதாஉல்லா அவர்ளுக்கும் நன்றி தெரிவித்தனர்.;

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை, கிண்ணியா நகர சபை, கடுவெல மாநகர சபையின் முதல்வர்கள் வாகனங்கள் பெற்றுக் கொள்வதை படங்களில் காணலாம்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா....

இன்றைய தினம் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தினமாகும். ஏனெனில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவு உயர்த்தப்பட்டதை உத்தியோகபூர்வமாக நேற்று (2014-11-15) நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அரசாங்க ஊழியர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் சம்பளங்கள் ஓரிரு வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகின்றது. இருப்பினும், 

உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களின் கொடுப்பனவு 15 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. அதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிக்கடி அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடமும் தன்னிடமும் கொடுப்பனவை உயர்த்தித்தருமாறு வேண்டியிருந்தனர். அதற்கமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய இம்மாதம் முதல் கீழ்வருமாறு அவர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

                       முன்னைய கொடுப்பனவு ரூபா   தற்போதைய கொடுப்பனவு ரூபா

நகர. பிரதேச உறுப்பினர்;    5000                                                   15000 

நகர. பிரதேச உப தவிசாளர்  6500                                                20000

நகர. பிரதேச சபை தலைவர்  10000                                           25000

மாநகர சபை உறுப்பினர்          7000                                              20000

பிரதி முதல்வர்                         10000                                                    25000

முதல்வர்                                       15000                                                    30000

என்ற அடிப்படையில் நவம்பர் மாதம் முதல் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மேலும், இன்றைய தினம் (2014-
11-16) முதலாம் கட்டமாக நாட்டில் காணப்படும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்களும் 
வழங்கப்படவுள்ளது. அத்துடன் அண்மைக்காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு கெப் வாகனம் 
வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் 150ற்கும் மேற்பட்ட சபைகளுக்கு டபள் கெப் வாகனங்கள் 
வழங்கப்படவுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகளுக்கு உதவியாக இயந்திராதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் 
தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண சபை 
அமைச்சர். எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை  உறுப்பினர். எம்.எல்.ஏ. அமீர். உள்ளுராட்சி 
மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க மற்றும் உள்ளுராட்சி சபைகளின் 
தவிசாளர்கள் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :