நாளையும் நாளை மறுதினமும் கட்சித் தாவல்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் மைத்திரியுடன் இணையவுள்ளார் என்ற செய்தி இன்று கொழும்பில் பரவலாக அரசியல் பிரமுகர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
குறித்த முஸ்லிம் பிரதியமைச்சர் – பொது வேட்பாளர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்ததை அறிந்த அரச உயர் மட்டம் ஒன்று அவரை உடனே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இடைநடுவில் அவரை திருப்பி அழைத்துக்கொண்ட செய்தி அரசியல் வட்டாரங்களிலிருந்து தற்போது கசியத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில் மீள் பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறவித்துள்ளது.
<முஸ்லிம்>
.jpg)
0 comments :
Post a Comment