இரண்டு மஜீதுகளை நோக்கிய நிலையில் பொத்துவில் மக்கள் -திண்டாட்டம்


பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

ரண்டு மஜிதுகளை நோக்கிய நிலையில் பொத்துவில் மக்கள்
எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது பற்றிய கருத்தாடல்கள் நிலவி வருகின்ற இவ்வேளையில் பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்தியும் எதிர்வரும் தேர்தலும் எனும் மகுடத்தில் இச்சிந்தனை சித்திரத்தினை வரையலாம் என நினைக்கின்றேன்.

இலங்கையில் பிரச்சினைகள் பற்றி பேசுவதாக இருந்தால் பொத்துவிலைத்தான் கோடிட்டுக்காட்டுவார்கள். தேசிய அரசியலில் கூட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் பிரச்சாரப் பொருளாக இனவாதத்தை விதைப்பதற்கும் பொத்துவில் காணிப் பிரச்சினைகள் நில ஆக்கிரமிப்புபற்றிப் பேசுவார்கள் ஆனால் பொத்துவிலுக்கு என்று சாதித்தது ஒன்றுமில்லை. 
 
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் மரத்தை மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் இருந்து பொத்துவில் மக்கள் ஆதரித்து வந்தார்கள் ஆதரித்து வருகின்றார்கள்.....ஆனால் எப்பொழுதும் அரசியல் அநாதைகளாகவே இம்மக்கள் காணப்படுகின்றார்கள்.

பொத்துவிலைப் பொருத்த வரையில் கடந்த காலங்களில் பொத்துவில் அபிவிருத்தயிpல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன வகையான பங்களிப்பினை செய்தது. பொத்துவிலுக்கு வந்து தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளைக்கூட நிறை வேற்றினார்களா? சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருந்த காலத்தில் கூட எந்தவொரு உரிமையினையும் பொத்துவில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. 

இப்பிரதேசத்துக்கு அவசியமான மாகாண சபை பதவியினை கூட திட்டமிட்டு தோற்கடித்தது .அப்பொழுது பொத்துவில் வாழ் முக்கிய பிரமுகர்கள் தலைவர் ரஊப் ஹக்கிமை சந்தித்தார்கள் அதில் நானும் சென்றிருந்தேன். 

கடந்த மாகாண சபைத்தேர்தல் கழிந்த நிலையில் பொத்துவில் வாழ் முக்கிய பிரமுகர்கள் தலைவர் ரஊப் ஹக்கிமை சந்தித்தார்கள். மாகாண சபை உறுப்பினரை கூட இழந்த நிலையில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் பொத்துவிலை ஆட்கொண்டுள்ளது. அதிகமான வாக்குகளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அளித்து வருகின்றோம். சரியான அரசியல் அந்தஸ்தை எம்மண்ணுக்கு தாருங்கள் என்று மடியேந்தி கேட்டு நின்றோம். ஆனால் எமது தலைவரோ அதனை ஏற்றுக்கொள்ள வில்லை.
ஆனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் என்பவற்றால் எந்தவொரு உரிமையும் பொத்துவிலுக்கு கிடைக்கவில்லை. 

இன்றும் கூட பொத்துவில் மக்களின் காணிகளுக்கான சரியான நிவாரனத்தை பெற்றுக்கொடுக்காத நிலையில் இவர்கள் பொத்துவில் வாக்கினை சுவிகரிக்கும் நிலையில்தான் அரசியல் செய்கின்றார்கள். இப்பொழுது தேர்தல் வேட்டையில் நாளாந்தம் வருகிறார்கள். வாக்குகளை குறி வைத்து சிறு சிறு அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார்கள். ஆனால் எமக்குத் தேவை உரிமைகளுக்கான அபிவிருத்திதான்.

எதிர் வரும் தேர்தலில் பெரும்பான்மையினத்தவர்கள்தான் ஜனாதிபதியாக போட்டியிடுவார்கள். ஆகவே நாம் இதுவரை வாக்களித்து ஏமாந்த நிலையில் இருப்பிடங்களுக்கான விலாசங்களை இழந்து வரும் இவ்வேளையில் யாரை ஆதரிப்பது சற்று சிந்திப்போம்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசை சற்று நகர்த்தி விட்டு எமது பொத்துவில் பிரதேச மக்களின் சுதந்திரமான உரிமைக்கும் அபிவிருத்திக்கும் வித்திடுபவர்களை நாம் ஆதரிப்போம்.

இந்த தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்சியின் மிக முக்கியமான பொத்துவில் உள்ளுர் அரசியலில் இரண்டு மஜித்கள் பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஒருவர் ஜக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைப்பாளர் எஸ்.எஸ்.பி எம். அப்துல் மஜித் அவர்கள் மற்றையவர் பொத்துவில் பிரதேசத்தின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஏ.எம். அப்துல் மஜித் (சேவாலங்கா) அவர்கள். 

இந்த இரண்டு நபர்களிடமும் பொத்துவில் குழு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும். பின்வரும் முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வினை யார்? பெற்றுத்தருகின்றார்களோ அத்தகையவர்ளின் அரசியலை நாம் ஏற்றுக் கொண்டு செயற்பட முனைவோம். பொத்துவிலுக்கு அவசரமான நிலையில் அவசரமாக தீர்க்க பட வேண்டிய பிரச்சினைகள் :

• பொத்துவிலுக்கான தனி கல்வி வலயம் இன்மையால் இன்னும் கல்விச்சமூகம் அவதியுருகின்றது. ஆகவே திறக்கப்பட்ட உப கல்வி வலயத்தை உடனடியாக வலயக்கல்வி அலுவலகமாக மாற்றுதல்.
• பொத்துவில் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளுக்கான சரியான அங்கிகாரத்தை வழங்குதல்
• நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து உரியவர்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குதல்
• பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினை நிவர்தி செய்தல்
• அரசியல் ஊடான இன ஒற்றுமையினை ஏற்படுத்தல்


ஆகவே மேற்சொன்ன பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க முயற்சி செய்வோம்.எமது அபிலாசைகளை தீர்த்து தருபவர் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிப்போம். இளைஞர்கள் ஒன்றுபட்டு பொத்துவில் அபிவிருத்தியில் பங்கெடுப்போம். இத்தேர்தலிலாவது பொத்துவிலுக்கான விடியல் கிடைக்குமா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :