அரசாங்கம் கொஸ்லந்த தமிழ் மக்களை கொன்றுவிட்டதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மலையக மக்களுக்கு வீடு அமைத்துத் தருவதாக ஜனாதிபதி கடந்த காலங்களில் தெரிவித்து வந்த போதும் அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படவுள்ளதாக தெரிவித்திருந்த போதும் அதனை ஜனாதிபதி செவிமடுக்கவில்லை.
ஆறுமுகம் தொண்டமான் மலையகத்தில் இருந்தும் அவரால் தனது மக்களுக்காகப் பேச முடியவில்லை.ஆனாலும் தமிழ் மக்களை அழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும்படி கோரிக்கொள்ளுவார்.மக்களின் தலைவர்கள் மக்களை பாதுகாக்கும் வேலைச் செய்யவேண்டும். அதுவே சிறந்த தலைவருக்கு உரித்தான பண்பு எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
<ஆ.ன்>
0 comments :
Post a Comment