அஸ்லம் எஸ்.மௌலானா-
ஜேர்மன் பேர்கன்பெல் ஐபாஸ் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற இடம்பெற்ற சுற்றாடல் பசுமை பேணும் திட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் பங்கேற்றுள்ளார்.
'சுற்றாடலை பசுமையாக வைத்திருத்துக் கொள்வதும் அதனை பொருளாதார வளமாக பாவிக்கும் முறைமையும்' எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜேர்மன் நாட்டின் பொருளாதாரஇ மின் சக்திஇ மின் வலு அமைச்சர் எவர்லைன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம சகிதம் கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டின் இறுதியில் கல்முனை மாநகர சுற்றாடலை பசுமையாக மாற்றியமைக்கும் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஜேர்மன் பேர்கன்பெல் ஐபாஸ் பல்கலைக் கழகத்துடன் கல்முனை முதல்வர் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தின் நவீன அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு கல்முனை மாநகர சபையை ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் இணைக்கும் இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டிருந்தார்.
கல்முனை மாநகர பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திஇ வர்த்தகம்இ கல்விஇ கலாசாரம்இ சமூகஇ பொருளாதார மற்றும் விளையாட்டுத் துறைகளின் முன்னேற்றம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த இரட்டை நகர இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
0 comments :
Post a Comment