கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண இளைஞர் யுவதிகளுக்கான வானொலி ,நாடக பயிற்சி நெறி

பழுலுல்லாஹ் பர்ஹான்-

மூக, சமய வித்தியாசங்களை மதித்தல், பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வினை ஊக்குவிக்கும் நோக்காக கொன்ட வானொலி மற்றும் நாடக பயிற்சி நெறி ஒன்றினை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் கனேடிய தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கவுள்ளது.

தமது கலைத்துவமான எழுத்தாற்றலின் வாயிலாக வானொலி மற்றும் நாடகங்களை உருவாக்கி அதன் முலம் சமூக பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று கருதுகின்ற இளைஞர் யுவதிகள் இப்பயறிசி நெறிக்கு விண்ணப்பிக்கலாம்.

கலை, இலக்கிய மற்றும் எழுத்தாற்றல் உள்ள இளைஞர், யுவதிகள் இப் பயிற்சிப்பட்டறைக்கு விண்ணப்பிக்கலாம்.

மூன்று கட்டங்களில் பத்து நாட்களுக்கு இடம்பெறவுள்ள இப் பயிற்சி நெறி வதிவிடப் பயிற்சியாக இடம்பெறும்.

பயிற்சி முடிவில் மூத்த வானொலிக் கலைஞர்களுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

ஆர்வமிக்க இளைஞர் யுவதிகள் இப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம்.

அடுத்து வரும் நான்கு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள இப் பயிற்சி நெறி முற்றிலும் இலவசமானது. தமிழ், சிங்களம், மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 24 இளைஞர் யுவதிகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

தகுதிவாய்ந்த, 35வயதுக்குக் குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு தெரிவின் போது முன்னுரிமை வழங்கப்படும்.

ஆர்வத்தை வெளிப்படுத்தும் கடிதத்துடன் யுppடiஉயவழைnளூடுனதக.ழசப எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு 0776653694 என்ற இலக்கத்துடனோ அல்லது இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம், 429. 2 ஃ1 நாவல வீதி, இராஜகிரிய எனும் முகவரியுடனோ தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 28 ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :