கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையே பாராளுமன்றத்தில் இன்று வாக்குவாதம் ஏற்பட்டது.
அண்மையில் கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக சபையில் கருத்து வெளியிட்டபோதே இரண்டு அமைச்சர்களுக்கும் இடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ சபையில் இன்று கடுமையாக விமர்ச்சித்தார்
இதன்போது குறுக்கிட்ட கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தாம் கவலை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ உரையாற்றிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

0 comments :
Post a Comment