அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக்கூட்டம்-




னாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக அயராது உழைக்கப் போவதாக இம்மாவட்டத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற எம்.பி க்கள் மற்றும் மாநகர, நகர சபை பிரதேச சபை முதல்வர்கள், தலைவர்கள் என்போர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

இது சம்பந்தமான செய்தியாளர் மாநாடு இன்று காலை (சனி-10.00க்கு) அம்பாறை ஆரியபவன் ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் கணிசமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உணவுப் போஷாக்கு மற்றும் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, தொழில் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர எம்.பி க்களான ஸ்ரீயானி விஜய விக்ரம, பி.எச்.பியசேன முன்னாள் மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ன ராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினரும், கல்முனைத் தொகுதி ஸ்ரீ லங்கா சு.கட்சி அமைப்பாளர் ஏ.எம்.எம்.றியாஸ் (வெஸ்டர்), தேர்தலுக்கான மாவட்ட இணைப்பாளர் சட்டத்தரணி பாறுக் சாஹிப் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ள மேற்படி முக்கியஸ்தர்களிடம் சரமாரியான வினாக்களையும் தொடுத்தனர்.

எஸ்.எம்.சன்சீர்
இறக்காமம் செய்தியாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :