இலங்கையில் ஊடகங்களை கட்டுப்படுத்த எந்தவிதமான நிறுவனங்களும் இயங்கவில்லை!

லங்கையில் ஊடகங்களை கட்டுப்படுத்தவோ அல்லது செய்திகளை தணிக்கை செய்வதற்கோ எந்தவிதமான நிறுவனங்களும் இயங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா நாட்டில் இன்று ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான தகவல் ஊடகத்துறை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;

நாட்டில் இன்று இலத்திரனியல் ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வானொலி, தொலைக்காட்சி, சேவைகள் பத்திரிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவற்றில் அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வெப் தளங்கள் இயங்குகின்றன. பல வெப் தளங்கள் அரசுக்கு சேறு பூசுகின்றன.

ஆனால், அரசு இவற்றை தடை செய்யவில்லை. அனைத்து ஊடகங்களும் சுதந்திரமாக இயங்குகின்றன. ஜனநாயக முறைமையில் ஊடகங்களுக்கு வரையறை கிடையாது. ஐ.தே. கட்சி ஆட்சிக் காலத்தில்தான் ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. தணிக்கை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இலங்கையில் ஊடகங்களை கட்டுப்படுத்தவோ அல்லது செய்திகளை தணிக்கை செய்வதற்கு அதிகாரிகளோ நிறுவனங்களோ கிடையாது. அனைத்து ஊடகங்களும் சுதந்திரமாக இயங்குகின்றன.

ஒவ்வொரு ஊடகவியலாளர்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் அரசியல் இருக்கும். ஆனால், ஊடகவியலாளர் இதற்கு அப்பாற்பட்டு உண்மைத் தன்மையுடனான செய்திகளை வெளியிட வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :