மேம்பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர் கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது.
திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற சில்வியா ராச்சேல(23) என்ற மருத்துவ மாணவி மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது கைப்பேசியில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
இதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வை அடுத்து மேம்பாலத்தின் கீழே உள்ள குடால்க்வீர் நதிக்கரையில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments :
Post a Comment