முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர், இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க, உலர் உணவுகள், அடைகளையும் பொன்சேகா தரப்பினர் எடுத்துச் சென்றிருந்ததுடன் அவற்றை விநியோகிக்க அதிகாரிகள் இடமளிக்கவில்லை. அத்துடன் அவற்றை பொறுப்பேற்கவும் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனையடுத்து தான் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை கோவிலகந்த கணேஷா வித்தியாலத்திற்கு அருகில் வைத்து விட்ட பொன்சேகா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதன் பின்னர் அங்கு சென்ற இடர் முகாமைத்துவ அதிகாரிகள் பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்றி முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.
.gif)
.gif)
0 comments :
Post a Comment