அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை யொட்டி 'மரம் நடுகை





த.நவோஜ்-

திமேதகு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை யொட்டி 'மரம் ஒன்றை நடுவோம் பசுமையான உலகினை காண்போம்' எனும் சிந்தனையின் கீழ் தேசிய மரநடுகை நிகழ்வானது நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.
 
இதனடிப்படையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையிலும் மரநடுகை நிகழ்வு வெகு சிறப்பாக திங்கட்கிழமை பிரதேச சபை வளாகத்திலும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு சொந்தமான கதிரவெளி சுற்றுலா விடுதி வளாகத்திலும் நடைபெற்றது.
 
இந்நிகழ்வின் போது பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார், பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வாகரை பிரதேச சபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
 
இதன்போது பயன் தரும், நிழல் மரவகைகளை சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :