கல்முனை மாநகரசபையில் நடந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரின் கருத்து


ல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சில சம்பவங்களை நான் அறியக் கிடைத்ததும் பழைய சில சினிமா பாடல்களின் பல வரிகள்தான் எனது ஞாபகத்துக்கு வந்தன.

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்துப் பார்த்த கிளி.. நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு....

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையே தீயிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ் பணிவான்...

சட்டமும் நான் உரைத்தேன்.... தைரியமும் நான் கொடுத்தேன்.. பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்குதடி செல்லம்மா எந்தன் செல்லம்மா...

கண்ணே என் கையைக் குத்தக் கண்டேனா கல்லை நான்... இப்படி எத்தனை எத்தனையோ பழைய பாடல்கள் என் நினைவுக்கு வருகிறது...

தெருவால போன பாம்பை சீலைக்குள் அள்ளிப் போட்ட மாதிரி என்று நம்ம ஊரவங்க சொல்வாங்க.. அந்த சீலம்தான் இன்று கல்முனையின் குட்டி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

அடாவடி புரியும் அந்த நபர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மட்டுமல்ல தனது பெஸ்ட் பிரண்ட் என்றும் கூறி புகழப்பட்ட நபரே இன்று புகழ்ந்தவருக்குச் சவால் விடுத்து அவரின் முன்னே தனது அராஜகத்தை அரங்கேற்றியுள்ளார்.

கல்முனையின் மாநகர சபையின் கௌரவமிக்க அமர்வுக்கே இன்று இழுக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது. தமிழக சட்ட சபையில் அன்றைய கால அமர்வொன்றில் நாற்காலியால் வீசி ஓர் அங்கத்தவரை தாக்கிய அந்த நினைவினை இன்று எனக்கு ஞாபகப்படுத்திய கல்முனை மாநகர சபைக்கு எனது நன்றிகளையும் தெரிவிக்கத்தான் வேண்டும்.

கல்முனை மாநகர சபை நிர்வாகம் என்பது இன்று உடுத்தியிருந்த சீலை கழற்றப்பட்ட ஒரு பெண்ணின் நிலைமைக்கு ஒப்பாகி விட்டது. அராஜகம் அரங்கேறும் ஓர் இடமாக அது இன்று மாறிவிட்டது. அங்கு அரசியல் விபசாரங்கள் அத்துப்படி..

வேண்டப்படாதோர் இன்று தீண்டப்படாத சாதியினராக, ஒரு தலித் சமூகமாக அங்கு நோக்கப்படுகின்றனர். தனது பெஸ்ட் நண்பன் மூலம் தான் யார் யாரை பழிவாங்க முடியுமோ அல்லது யார் யாரை அடிக்க முடியுமோ அவையெல்லாம் கச்சிதமாக அரங்கேறும் நிலையில் இன்று வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்து விட்டது. தன்னை அது குத்தா விட்டாலும் தனது பண்ணையை (முஸ்லிம் காங்கிரஸ்) சேர்ந்த ஒருவரையே குத்தி விட்டது. இப்போது மடடும் அவரைக் கைது செய்யுங்கள் என்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு தான் கூறுவார்கள்.. கூடா நட்பு கேடாய் முடியுமென்று. தம்பிமார் இதனைப் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

கல்முனை மாநகர சபையின் முதல்வருக்குரிய அதிகாரங்கள், மாநகர சபை ஒன்றுக்கான சட்டவாக்கங்கள் ஒழுக்கக் கோவைகள் அனைத்தும் இன்று ஒரு சிரேஷ்ட முதுமாணி சட்டத்தரணியிடமே நீதி கேட்டு நிற்கின்றன. மாநாகர சபை அங்கத்தவர்களின் ஒழுக்க கோவைகள் இன்று கோவணத்துடன் நிற்கின்றன.

முன்னர் கூட இந்த நபர் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டிருந்த போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் மூடி மறைக்கப்பட்டதனை எவரும் மறந்திருக்க முடியாது. ஒரு தனி நபரின் காட்டாச்சி இன்று கல்முனை மாநகர சபை மேயரின் உத்தியோகபூர்வ உடைக்கே அவமானத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்த நிலை இன்னும் தொடருமாக இருந்தால் கல்முனை மாநகர சபையின் அமர்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறும் போதெல்லாம் கல்முனை மாநகர சபை வளாகத்துக்குள் ஓர் அம்பியுலன்ஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட வேண்டும். வைத்தியசாலையில் கட்டில்களை வெற்றிடமாக வைக்கப்படட வேண்டும். சிலவேளைகளில் கபனும் கபுறும் தேவைப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

சட்டம் ஏமாந்து போனாலும் போகும்... தர்மம் எப்போதும் பழிவாங்கித் தீரும்.. நீ உனக்காக.. உருவாக்கும் நியாம் அது அநியாயமானாலும் ஆகும்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :