பேச்சுவார்த்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!!

அவதானி-

Daily Mirror ஆங்கில பத்திரிகை அண்மைக் காலங்களில் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் Political Gossip (அரசியல் அரட்டை) எனும் தலைப்பில் சிறு சிறு துணுக்குகளாக பல தகவல்களை பட்டும் படாமலும் பிரசுரித்து வருகின்றது. மிகவும் சுவாரஸ்யமான இந்தப் பகுதியை நான் தொடர்ந்து வாசிப்பதுண்டு. அதில் இன்று எனது கண்ணில் பட்ட ஒரு விடயத்தை மொழிபெயர்த்து தருகிறேன். இது எனது கருத்தல்ல.(12.11.2014 – Daily Mirror page A5 More Perks to ignore the strident demand)

தனது மக்களின் கர்ண கடூரமான எதிர்ப்பை அலட்சியம் செய்ய மேலும் பல சலுகைகள்

கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களின் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ள ஒரு கட்சித் தலைவரான அமைச்சர் ஆளும் தரப்பினருடன் காரசாரமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அப்போது அமைச்சர் “அடுத்த தேர்தலில் பெரும் தலைவரை ஆதரிக்க நான் தயார். ஆனால் எனது மக்களும் வாக்காளர்களும் நாம் அரசில் இருந்து வெளியேற வேண்டும் என வற்புறுத்துகின்றனர்” என்றார் .

அரச தரப்பு நேரடியாக விடயத்துக்கு வர எண்ணியது. அமைச்சரிடம் அவர்கள் நேரடியாகக் கேட்டார்கள் "வெளிப்படையாக சொல்லுங்கள் நீங்கள் உங்கள் மக்களின் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு எங்களுடன் தொடர்ந்து இருக்க நாங்கள் இன்னும் உங்களுக்கு என்ன தரவேண்டும்?”

அரச தரப்பின் இந்த உற்சாகம் ஊட்டும் பதிலைக் கேட்டு அமைச்சரும் நேரடியாகவே விடயத்துக்கு வந்தார். “மேலும் இரண்டு பிரதி அமைச்சர் பதவிகள். என்னுடைய சகோதரருக்கு தூதுவர் பதவி. எனக்கு இதை விட முக்கியமாதோர் அமைச்சர் பதவி. இவை எல்லாம் கிடைத்தால் எனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவர். அத்தோடு கிழக்கு மாகாண சபை தொடர்பாக ஏற்கனவே இணங்கிய பல விடயங்களும் உள்ளன....” என்றார்.

பெரும் தலைவரோடு பேசிவிட்டு மீண்டும் சந்திப்போம் என ஆளும் தரப்பு உறுதி அளித்தது. ஆனால் அமைச்சருக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இந்த செய்தியின் கீழ் பார்த்வுடனயே ஒரு அமைச்சரை நினைவுக்கு வரும் வகையில் ஒரு கேலிச் சித்திரமும் தரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :