எம்.வை.அமீர, எம்.ஐ.சம்சுதீன்-
இன்று கல்முனை மாநகரசபை அமர்வின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை கூட்டியிருந்தார். இப்பத்திரிகையாளர் மாநாட்டின் போது கருத்துத் தெரிவித்த மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் இன்று இடம்பெற்ற காட்டு மிராண்டித்தனமான சம்பவங்களை கட்சி பேதமின்றி கண்டிப்பதாகவும் குறித்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மாநகர சபை உறுப்பினர் றியாஸ் எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் றியாஸினால் தாக்கப்பட்டா உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ் மற்றும் ஏ.நஸார்தீன் ஆகியோருக்கும் தனது அனுதாபத்தினையும் தெரிவித்தார்.
இங்கு கல்முனை மாநகர சபையின் தமிழ் கூடமைப்பின் உறுப்பினர் எதிர்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் இச் சம்பவங்களை கண்டு மிகுந்த வேதனையடைவதாகவும் இவ்வாறன சம்பவங்கள் எதிர்காலத்தில் எற்பட்டாமல் இருக்க முதல்வர் உட்பட சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment