தாம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஹொரகொல்லயிலுள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர், கருத்து வெளியிட்டபோது, இதனைக் கூறியுள்ளார்.
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இன்றும் நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்.
அதேபோன்று நான், இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர். நான் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தோ அல்லது பொது செயலாளர் பதியிலிருந்தோ இதுவரை சட்டபூர்வமாக நீக்கப்படவில்லை.
சுமார் 47 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் செயற்பட்ட ஒருவன் நான். சிறிவோமா பண்டாரநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழும், சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமைத்துவத்தின் கீழும் அதன்பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழும் நான் செயற்பட்டுள்ளேன்.
அந்த காலப்பகுதியில், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகள் இலக்குகள் என்பன மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினாலும் நாட்டு பற்றுள்ள அரச தலைவர்களாலும் உருவாக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 1956 ஆம் ஆண்டு அரசாங்கம் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது.

0 comments :
Post a Comment