இஞ்சியை கொடுத்து மிளகை பெற்றுக்கொள்ளப்போகிறோமா? மாநகரசபை உறுப்பினர் அஸ்மி


ரலாற்றில் போர்த்துக்கேயரை வெளியேற்றி ஒல்லாந்தர் இந்த நாட்டையை கைப்பற்றியதை வரலாற்று ஆசிரியர்கள் கூறிப்பிடும் போது இஞ்சி போன்ற காரமிக்கவர்களை வெளியேற்றி மிளகு போன்ற மிகக் காரமானவர்களை இந்த நாடு பெற்றுக்கொண்டது.


அதே போல் இனவாத சதி வலையை மிகப் பாரிய திட்டமிடலுடன் முன்னடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சிக்கெதிராக மேற்குலகு மேற்கொள்ளும் சதியை புரிந்து கொள்ளாது எமது மக்கள் செயற்படுவார்களானால் அது மேற்சொன்ன உதாரணத்துக்கு ஒப்பானது. 

இவ்வாரு அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலய விடுகை விழாவின் போது அஸ்மி எ கபூர் தெரிவித்தார். இவ்விழாவில் பிரதம அதிதியாக அதாவுல்லாஹ் அஹமட் சகி அக்கரைப்பற்று முதல்வர் கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.தாசிம் தலைமையில் விழா இடப்பெற்றது. 

மேலும் எமக்கு நாட்டில் நடக்கும் உள்ளக கைமாறுதல் என்ன? சர்வதேசம் இதற்கு என்ன எண்ணம் கொண்டிருக்கிறது? முஸ்லீம்களுக்கெதிரான அநீதிகளுக்கு காரணமான சக்திகளுக்கு உரமூட்டியது யார்? அதன் உள்ரங்கம் என்ன? என்பது தொடர்பில் இவ்வளவுகாலமும் எம்மை வழி நடாத்தும் தலைமை எம்மைவிட கரிசனை கொண்டது எனவே அது தொடர்பில் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் மக்களாக நாம் எப்போதும் இருப்போம் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை எனதெரிவித்தார்.
 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :