எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் துக்கம் அறிந்த ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவரது தலைமையில் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை சுபீட்சமடையச் செய்ய ரணில் விக்ரமசிங்கவால் முடியும் என்றும் ஆகையால் அவரை வெற்றிபெறச் செய்ய அனைவரும் பேதங்கள், கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளி ஒன்றிணைய வேண்டும் என்றும் சஜித் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் தொழிற்சங்களுக்கு பாரிய கடமை உள்ளதாகவும் அதனால் தொழிற்சங்க உறுப்பினர்களை அதிகரித்து வலுசேர்க்க வேண்டும் என்றும் இன்று (05) கட்சி தலைமையகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த போது சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment