மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தளை - இரத்தோட்டை பிரதேசத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சுமார் 500 ற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளர் சமிந்த டி அமரவீர தெரிவித்தார்.
இரத்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தேநுவர, சின்ன செல்வகந்தை, தங்கந்தை, தம்பகொல்ல, லக்கல, பிட்டகந்த ஆகிய பகுதிகளில் வசித்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் வழிபாட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment