ஐ.நா.விசாரணை குழுமுன் சாட்சியமளிப்பதை தடுப்பதானது அடிப்படை மனித உரிமை மீறல்- சம்பந்தன்

க்­கிய நாடு­களின் மனித உரி­மை உயர்ஸ்­தா­னி­கரால் நிறு­வப்­பட்­ட­தான இலங்கை மீதான விசா­ரணைக் குழுவின் முன்­தோன்றி சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு ஆர்­வ­முள்­ள­வர்­களை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டா­னது அடிப்படை உரிமை மீறல் என்­ப­துடன் நீதிக்­கான உரி­மையை அப்­பட்­ட­மாக மீறு­கின்­ற­து­மான செயற்­பா­டாகும் என்று

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் நேற்று சபையில் தெரி­வித்தார்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்பில் அர­சாங்கம் சிந்­திக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­திய சம்­பந்தன் எம்.பி. வடக்கு கிழக்கு மாகாண சபைகள் வெற்­றி­க­ர­மாக இயங்­கு­வதை விரும்­பாத கார­ணத்தால் எமது மக்­களின் ஜன­நா­யக ரீதி­யி­லான அபி­லா­ஷை­களை மறுத்து திசை திருப்பல் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது இடம்­பெற்ற வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் நாள் குழு­நிலை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சம்­பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

இறு­திக்­கட்ட யுத்தம் இடம்­பெற்று முடிந்­ததன் பின் பின்னர் அர­சாங்கம் கூறிய கூற்­றுத்தான் யுத்­தத்தின் போது பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்­பதும் அங்கு இடம்­பெற்­றது மனி­தா­பி­மான நட­வ­டிக்கை மாத்­தி­ரமே என்­ப­து­மாகும்.

அது­மாத்­தி­ர­மின்றி விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் தொடர்பில் விமர்­சிக்க முடி­யாது என்ற தோர­ணை­யிலும் கூறி­யி­ருந்­தது. எனினும் இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது மனி­தப்­ப­டு­கொ­லைகள் அதா­வது சிவி­லி­யன்கள் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

இதன் பின்­ன­ணி­யி­லேயே பின்னர் இலங்கை மீதான விசா­ரணை ஒன்­றிணை மேற்­கொள்­வ­தற்­கான நிபு­ணர்­குழு ஒன்று ஐ.நா. மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னி­கரால் நிய­மிக்­கப்­பட்­டது. எனினும் அந்­தக்­குழு தனது பணி­களை மேற்­கொள்ள முடி­யாத வகையில் தடைகள் போடப்­ப­டு­கின்­றன. இதனால் அந்த சாட்­சி­யங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு இய­லாமை ஏற்­பட்­டுள்­ளது. அதே­போன்று சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு விரும்­பு­வோரும் மறுக்­கப்­ப­டு­வதால் அவர்­க­ளது அடிப்­படை உரிமை பறிக்­கப்­ப­டு­வ­துடன் இதற்­கான உரி­மையும் அப்­பட்­ட­மா­கவே மீறப்­ப­டு­கின்­றது.

வட­மா­காண சபை­யா­னது 3 இலட்­சத்து 50 ஆயி­ரத்து 521 வாக்­கு­களைப் பெற்று இன்னும் கூறினால் 78 வீத­மான வாக்­கு­களைப் பெற்று வடக்கு மக்கள் தமது அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்து கொள்­வ­தற்­கான தீர்ப்­பினை வழங்­கினர்.

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்கு அதி­கா­ரப்­ப­கிர்­வினை மேற்­கொள்­வ­தற்­குமோ மாகாண சபை முறை உரு­வாக்­கப்­பட்­டது. ஆனாலும் மக்­களின் ஜன­நா­யக ரீதியில் அமைந்த வட­மா­காண சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு எல்லா வகை­யிலும் அர­சாங்கம் முட்­டுக்­கட்­டை­க­ளையே இட்டு வரு­கின்­றது. இங்கு இரா­ணு­வத்தின் பிர­சன்­ன­மா­னது வட­மா­காண சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூ­றாக இருந்து வரு­கின்­றது.

வட­மா­காண சபையின் நிலை இவ்­வாறு இருக்­கின்ற போது 2012 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் மத்­திய அர­சாங்கச் செயற்­பாட்­டா­ள­ராக இருந்து வரு­கின்றார். இதனால் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் மீதான அதி­ருப்தி வியா­பித்து காணப்­ப­டு­கின்­றது. இரா­ணு­வத்தின் தலை­யீ­டுகள் மாகாண சபை­களின் சீரற்ற தன்­மை­க­ளுக்கு கார­ண­மாக இருக்­கின்­றன. அத்­துடன் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்கும் இவை தடை­யாக இருக்­கின்­றன.

வடக்கு கிழக்கு மாகாண சபை­களின் ஆட்சி முறைகள் வெற்­றி­க­ர­மாக அமைந்து விடக்­கூ­டாது என்­பதில் கவனம் செலுத்தி வரு­கின்ற அர­சாங்கம் பல்­வேறு வித­மான திசை திருப்­பல்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது.

மத்­திய அர­சுக்கு நம்­பிக்­கை­யாக செயற்­ப­டு­ப­வர்­களால் மாத்­திரம் வடக்கு கிழக்கில் செயற்­பட முடியும் என்­ப­தான நிலைமை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதன் அடிப்­ப­டை­யில்தான் கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரும் செயற்­பட்டு வரு­கின்றார். இப்­ப­டி­யான நிலை­மைகள் இந்­நாட்­டுக்கு பாரிய விளை­வு­க­ளையே தோற்­று­விக்­கப்­போ­கின்­றது.

மேலும் கடந்த காலங்­களில் அதா­வது யுத்த காலங்­களின் போது உயர் பாது­காப்பு வல­யங்கள் தேவை என்ற விட­யத்தை ஏற்­றுக்­கொள்­கின்றோம். இருப்­பினும் இப்­போது யுத்தம் இல்லை ஷெல் வீச்­சுத்­தாக்­குதல் கிடை­யாது. அப்­ப­டி­யானால் இப்­போது ஏன் உயர் பாது­காப்பு வல­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதே எனது கேள்­வி­யாகும்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால் அவர் வலி­காமம் பிர­தே­சத்­துக்கு சென்­றி­ருந்தால் அங்கு எமது மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அறிந்­தி­ருந்தால் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்பேன். எனினும் மீண்டும் ஜனா­தி­பதி யாழ்ப்­பாணம் சென்றால் வலி­கா­மத்­துக்கு செல்வார் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

இதே­வேளை இன்று வடக்கு செல்லும் வெளி­நாட்­ட­வ­ருக்கு புதிய நடை­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த கால நிலை­மை­களால் வெளி­நாடு சென்றவர்களுக்கு தற்போது இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் இலங்கையர்தான் என்பதைக் கூறி வைக்கின்றேன்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்குத் திரும்பி தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு இடமளிக்கக்கூடாது. அவர்கள் இங்கு முதலீடுகளை செய்வதற்கு இடமளிப்பதில்லை. அவர்கள் இங்கு வியாபாரங்களை மேற்கொண்டால் நாட்டுக்கு நலமல்லவா? அப்படியானால் ஏன் இந்த புதிய தலைமுறை? அவர்களுக்கு தலைவிதிப்பது ஏன்?

இவ்விவகாரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் என்று விநயமாக கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :