சப்றாஸ்-
பிரதான குடியிருப்பாளர்களின் விருப்பத்திற்கு மாறாக நுரைச்சோலை
மன்னார் மாவத்தையில் நிறுவப்பட ETISALAT தொலைத் தொடர்பு கோபுரம் அதனைச் சூழ வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பெரும் அசெளகரியத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்த தொலைத் தொடர்பு கோபுரத்தில் அண்மைக் காலமாக Diolog ,Mobitel நிறுவனங்களும் தங்களது தொடர்பாடல் கருவிகளை பெருமளவு பொருத்தி உள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கதிர்வீச்சை வெளியிடும் அபாயம் உள்ளதால் மனிதர்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மழை காலங்களில் இதனைச் சூழ உள்ள இடங்களில் இடி மின்னல் தாக்கம் ஏற்படுகிறது.
மின்சாரம் தடைபடும் நேரம் எல்லாம் தானியங்கி முறையில் இயங்கும் பாரிய ஜெனரேட்டர் ஏற்படுத்தும் சத்தம் அருகில் வசிக்கும் சிறு குழந்தைகளுக்கு,வயோதிபர்களுக்கும், நோயாளிகளுக்கும், பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது
தொலைத் தொடர்பு கருவிகளை பராமரிக்கும் தொழில்நுட்ப வியலார்கள் கோபுரத்தில் இருந்த வாறு வீடுகளில் உள்ளவர்களை அவதானிக்கும் வாயிப்பு இருப்பதால் பெண்கள் அவர்கள் இறங்கிச் செல்லும் வரை தனது அன்றாட கடமைகளை செய்ய முடியாது காத்திருக்கின்றனர்
மொத்தத்தில் குடியிருப்பலர்களின் இயல்பு வாழ்க்கையை கேள்வி குறியாக்கி உள்ள இந்த தொலைத் தொடர்பு கோபுரம் பற்றி மனிதாபிமானமிக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா ?




0 comments :
Post a Comment