இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் மூதூர் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளின் மாணவ தலைவர்களுக்கு சட்டமும் தலைமைத்துவமும் எனும் தொனிப்பொருளில் முழு நேர பயிற்சி நெறி ஒன்று 17.11.2014 அன்று மூதூர் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப்.ஏ.ஆர்.எம்.பாரூக்(ளுடுநுளு) அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியின் பிரதான வளவாளர்களாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் நிலையத்தின் சட்டத்தரணிகளான முகம்மது லத்தீப் பைஸர் மற்றும் செல்வி.அனஸ் ருக்ஸானா பானு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த பயிற்சி நெறியில் இலங்கையின் அடிப்படைச்சட்டங்களும் நீதிமன்ற செயற்பாடுகளும்,சிறுவர் பாதுகாப்பு பொறிமுறை மற்றும் தலைமைத்துவமும் முரண்பாட்டுத் தீர்வும் எனும் விடயங்கள் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
www.importmirror.com
www.importmirror.com www.importmirror.com
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment