முனாப் நுபார்தீன்-
அல்லாஹ்வின் தண்டனை என்பது பல்வேறு வடிவம் கொண்டதாகும் அவற்றுள் ஒரு மனிதகுக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்ற மிகப்பெரிய தண்டனை என்பது அது அல்லாஹ்வின் தண்டனை என்பதனை ஒருவன் உணர்ந்து கொள்ள முடியாத விதத்தில் அவன் தண்டிக்கப்படுவதாகும் உதாரணமாக ஒருவன் நேர்வழியிலிருந்து நெறிபிறழ்ந்து வழி கேட்டில் நிலைத்திருத்தல்;. ஆனாலும் தான் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றேன் என்பதனை அவன் உணர்ந்து கொள்வதில்லை.
இபுனு கைய்யூம் அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் பனீ இஸ்ராயீல்களின் அறிவிப்பிலிருந்து ஒரு சம்பவத்தினைக் கூறுகின்றார்கள் : பனீ இஸ்ராயீல்களில் ஒரு மனிதன் என் இறiவா நான் உனக்கு எவ்வளவோ மாறு செய்கின்றேன் ஆனால் நீ என்னைத் தண்டிப்பதாக இல்லையே என்று கூறினான். அதற்கு அல்லாஹ் நான் எவ்வளவோ உன்னைத் தண்டிக்கின்றேன் அது உனக்குத் தெரியாது இருக்கின்றது. ஏன் உனக்கு நான் எனது வழிபாட்டின்; இன்பத்தைத் தடுக்கவில்லையா? என்று அறிவித்தான்.
மேற்படி சம்பவம் ஒரு பாவி தனது உடல் ஆரோக்கியம் பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றை வைத்து தான் எந்த அளவு பாவங்கள் செய்த போதிலும் தான் தண்டிக்கப்படவில்லை என்று எண்ணிக் கொள்கின்றான் இந்த எண்ணமே அவனுக்குரிய தண்டனையாகும் என்பதனை அவன் உணர்ந்து கொள்ள முடியாதிருப்பதுவும் அவ்வாறே இறை வழிபாட்டில் நாட்டமில்லாது இருப்பதுவும் அவனுக்குரிய மிகப்பெரிய தண்டனையாகும் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.
ஆம் ஒரு மனிதன் தான் செய்வது தவறு என்று உணரும் போது அதிலிருந்து தவ்பா செய்து மீண்டு கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : தவிரää மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும்ää அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும்ää அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.(அல்-குர்ஆன் : 3:135)
ஆனால் அதனைப் பாவம் என்று உணர்ந்து கொள்ள முடியாத மனிதனால் அதிலிருந்து விடுபட முடியாது. அவன் தான் செய்வது சர்வசாதாரணமான ஒன்றுதான் என்று எண்ணிக் கொண்டு அந்த செயலில் தொடர்ந்து இருந்து விடுவான்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?"" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் மிகப் பெரும் நஷ்டவாளிகள். (அல்-குர்ஆன்: 18:103-104)
இவ்வாறு மனிதனால் உணரப்படாது தொடர்ந்து கொண்டிருக்கும்; அல்லாஹ்வின் பல்வேறுபட்ட தண்டனைகளுள் சில.
1. ஒருவனுக்கு வணக்க வழிபாடுகள் மீது ஆர்வம் இல்லாது போதல்.
2. பாவங்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படல்.
3. அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து தடுக்கப்படல்.
4. அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் சந்தர்பங்கள் இலகுவாகக் கிடைத்தல்;.
5. அந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குக் கிடைத்தப் பெரும் பாக்கியம் எனக்கருதுதல்.
6. தான் செய்து கொண்டிருக்கும் பாவங்களைப் பெருமையாகக் கருதிக் கொள்ளல்.
7. ஹராமான வழியில் பொருளாதாரம் கிடைக்கும் போது அதில் மகிழ்ச்சி காணுதல்.
8. ஒட்டு மொத்தத்தில் நேர்வழியிலிருந்து விலகி வழி கேட்டில் செல்லுதல்.
ஒரு பாவத்திற்குப் பின் இன்னுமொரு பாவம் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அந்தப் பாவத்திற்கான தண்டனையாகும். அவ்வாறே ஒரு நன்மைக்குப் பின் இன்னுமொரு நன்மை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படல் என்பது முன்னய செயல் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அடையாளமாகவும் அந்த நன்மைக்குரிய பிரதிபலனாகவும் இருக்கும்.
அல்லாஹ் ஒரு அடியானுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அருள் அவனை வழிகேட்டில் செல்வதிலிருந்து தடுத்து நேர்வழியின்பால் இட்டுச் செல்வதாகும் அவ்வாறே ஒரு அடியானுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை அவனை நேர்வழியிலிருந்து தூரமாக்கி வழிகேட்டில் விட்டு விடுதலாகும்.
ஆகவே நாம் நேர்வழியில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோமா அல்லது வழிகேட்டில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேதாமா என்பதைக் கவனித்து மேற்படி இரு வகுப்பார்களில் நாம் எந்த வகுப்பில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதனைப் புறிந்து கொள்ளலாம்.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் மானக்டோன பாவமான செயல்களிலிருந்தும் அவனுக்கும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறு செய்வதிலிருந்தும் பாதுகாத்து வழிகேட்டிலிருந்து தூரமாக்கி நேர்வழியில் செலுத்துவானாக.
0 comments :
Post a Comment