தமது உரிமைகளை கேட்டு நாட்டில் யாரும் வன்முறையற்ற ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம். சத்தம் போட லாம். பாதயாத்திரை கூட செல்லலாம். அது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயக உரிமையாகும்.
ஆனால் வன்முறையை கையில் எடுப்பதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
இதேவேளை வெளியிலிருந்து தீர்வு கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருந்தால் அது நடக்காது. தீர்வை அடையும் இணக்கப்பாட்டைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டியது அவசியமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உரிமைகளை பெறுவதற்காக ஜனநாயக ரீதியில் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். தமது உரிமைகளை கேட்டு நாட்டில் யாரும் வன்முறையற்ற ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம். சத்தம் போடலாம். பாதயாத்திரை கூட செல்லலாம். அது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயக உரிமையாகும்.
இது ஜனநாயக நாடு. எனவே அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. நாங்கள் கூட எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாதயாத்திரை சென்றுள்ளோம். ஆனால் வன்முறையை கையில் எடுப்பதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயகத்தை மீறி வன்முறைகளில் ஈடுபட நாங்கள் அனுமதி வழங்கமாட்டோம்.
இதேவேளை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். நாங்கள் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை கோரியுள்ளோம். தற்போது கூட அழைப்பு விடுக்கின்றோம்.
இதனைவிடுத்து வெளியிலிருந்து தீர்வு கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருந்தால் அது நடக்காது. தீர்வை அடையும் இணக்கப்பாட்டைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டியது அவசியமாகும்.
என்று நாம் இந்திய பிரமதமரிடமும் கூறியுள்ளோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குவரும்வரை நாங்கள் காத்திருக்கின்றோம்.
.jpg)
0 comments :
Post a Comment