பைஷல் இஸ்மாயில் -
மத்திய அரசாங் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சேதன பசளை உற்பத்தித்திட்டத்துக்கு அமைவாக அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேதன பசளை உற்பத்தியும், பாவனை வயல் விழா நிகழ்வு அக்கரைப்பற்று விவசாய போதனாசிரியர் ஏ.எல்.றபீக் தலைமையில் இன்று (10) இலுக்குச்சேனை கிராமத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக், அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர்.அப்துல் லத்திப், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிச் செயலாளர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், விவாய கண்கானிப்பு உத்தியோகத்தர் துசிதா வடிவலகன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலுக்குச்சேனை பிரதேச விவாயிகளுக்கும், அதிதிகளுக்கும் விவசாய போதனாசிரியர் ஏ.எல்.றபீக் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பாக செயல்முறை விளக்கமளித்தார்.
மேலும் அங்கு அவர் கூறுகையில்,
விவசாயிகளிடம் கிடைக்பெறுகின்ற தாவர, விலங்கு கழிவுகளைப் பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்திய செய்வதனால் அசேதனப் பசளைப் பாவனையை குறைத்துக் கொள்வதோடு இதற்கான செலவினத்தையும் குறைத்துக் கொள்ளலாம். அத்தோடு சூழலுக்கு இசைவான இச்சேதனப் பசளை பாவனையினால் மண்வளம் அதிகரிக்கப்படுவதோடு அதிக விளைச்சலையும் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பெறப்படும் உணவு உற்பத்திகளை நுகர்வதனால் மனிதனின் ஆரோக்கியமும் பேணப்படும் என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment