த.நவோஜ்-
மட்டக்களப்பு பிள்ளையாரடி வண்ணத்துப் பூச்சி பூங்கா வீதியில் அமைந்துள்ள கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தினால் புதன்கிழமை ஆசிரியர் தின நிகழ்வுகள் அதன் பணிப்பாளர் எஸ்.மயூரன் தலைமையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்திரனாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இநதிரகுமார் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக கிறிஸ்தவ மத போதகர் திவ்யகுமார், மட்டக்களப்பு மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன், செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பிரமுகர் எஸ்.பிறேம்குமார் ஆகியோரும், தொழிற் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்றுவிப்பாளர்கள் அதிதிகள் என பலர் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், தொழிற் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் எனும் சாதாரண கற்களை சிற்பங்களாக வடிக்கும் ஆசிரியர்களை நினைவு கூருவதற்கு காலம் கிடையாது அந்த வகையில் ஆசிரியர் தினம் முடிவுற்றாலும் அதன் மகிமை இன்னும் மங்காத நிலையில் காணப்படுகின்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment