பொத்துவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புள்ளி ஒருவர் மைத்திரிக்கு ஆதரவு!

எம்.ஏ. தாஜகான்-

பொத்துவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புள்ளி ஒருவர் இம்முறை  ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிக்கப் போவதாக இம்போட் மிரருக்கு நம்பகமான செய்தி  கிடைக்கப் பெற்றுள்ளது. 

இது பற்றி சந்திரிக்கா அணியினருடன் தான் பேச்சு  வார்த்தையில் ஈடு படுவதாக அறிவித்தள்ளார். காலம் வரும் பொழுது ஊடகங்களில்  தனது பெயரை தெரிவிக்க உள்ளதாக குறித்த நபரின் நெருங்கிய ஆதரவாளர் எம்மிடம்  தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர் எம். அப்துல் மஜீத் அவர்கள்  சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி ஜக்கிய தேசிய கட்சியில்  இணைந்த பின்னர் பொத்துவிலில் பாரிய திருப்பம் இடம் பெற்றுள்ளது. 

அதே  வேளை பொத்துவில் பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்தை  ஆதரிப்பதாக முடிவெடுத்து தேர்தலுக்குரிய முன்னாயத்தங்களை செய்து வருகின்றனர். 

மேலும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவை ஆதரிக்கும் பட்சத்தில் சிறி  லங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் பொத்துவில்  மக்களின் இருப்பை பாதுகாக்கும் நோக்கில் கட்சியில் இருந்து விலகி தனித்துவமாக  மைத்திரியை ஆதரிக்கப் போவதாக எமக்கு சற்று முன் செய்தி கிடைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :