அஷ்ரப் ஏ சமத் - கேள்வி அமைச்சர் அவர்களே தங்களின் அமைச்சின் கீழ் சகல மாவட்டச் செயலகங்களும் இருந்து வருகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு தனியானதொரு கரையோர நிருவாக கச்சேரியொன்றை நீண்டகாலமாக கேட்டுவருகின்றதே. அதனை அரசாங்கம் வழங்குமா ?
அமைச்சர் ஜோன் செனவிரத்தின பதில் - முஸ்லீம் காங்கிரஸ் இவ்வாறு இனரீதியான ஒரு நிருவாகத்தை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். ஆனால் இந்த ஊடகவியலாளர் மாநாடு எனது அமைச்சின் அபிவிருத்திகள் பற்றியது. ஆகையால் உங்கள் கேள்விக்கு அரசியல் சம்பந்தப்பட்டது இங்கு அதற்கு பதிலளிக்க முடியாது. ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கும் கொள்கையொன்று உள்ளது. இனரீதியாக மாவட்டங்களை பிரிக்க முடியாது. இந்த நாட்டில் 25 மாவட்டங்களில் மவாட்க் காரியாலயங்கள் பண்நெடுங்காலமாக இருந்து வருகின்றது. இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மட்டத்திலும் ஏனை அரசில் ;அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இணைந்துதான் முடிபு எடுக்கப்படல்வேண்டும். என பதிலளித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
இந்த அரசாங்கத்தில் ஒர் அரசாங்க ஊழியர் ஆகக் குறைந்தது 25ஆயிரம் ருபா சம்பளத்தை பெறக்கூடியவகையில் அடிப்படைச்சம்பளம் 15ஆயிரம் ருபாவும் கடந்த ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட வாழக்கைச் செலவுடன் 7,800 ருபாவை அதிகரிக்கப்பட்டிருந்தது. இவ் ஆண்டில் அதிகரிக்கப்பட்;பட்ட 2200 ருபாவுடன் சேர்த்து 10ஆயிரம் ருபாவவை அரசு சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளது.
இவ் ஆண்டு அதிகரித்த 2200 ருபா நவம்பர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். என பொதுநிருவாக அமைச்சர் ஜோன் செனவிரத்தின தெரிவித்தார்.
இன்று(5)தகவல் திணைக்களத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேற்கண்ட தகவல்களைத் அமைச்சர் தெரிவித்தாh.;
அவர் அங்கு தொடர்ந்து தகவல் தருகையில் -
அமைச்சுக்களில் திணைக்களங்கள், கூட்டுத்தாபணங்களில் 1 இலட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தற்காலிகமாகவும் சேவை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 180 நாற்கள் சேவைகளை பூர்திசெய்திருப்பின் இவ் நவம்பர் மாத்துடன் அவர்களுக்கு நிரந்தர நியமணம் வழங்க அரசாங்கம் தீர்மாணித்துள்ளது. திரைசேரி செயலாளருடன் அடுத்த வாரம் அனுமதி கிடைத்தவுடன் அமைச்சுக்களுக்கு அறிவிக்கப்படும்.
தற்பொழுது அரசாங்க ஊழியர்கள் தமது சம்பளத்தில் 40 வீதத்தினை எந்தவொரு வங்கிக்கும் சென்று கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையில் 14 இலட்சம் பேர் அரசாங்க உத்தியோகத்தர்களாக அரச சேவையில் சேவை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 50ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச சேவையில் தொழில் வழங்கப்பட்டுள்ளது. 13360 முகாமைத்துவ உதவியாளர்களாக சேர்;த்துக் கொள்ளப்பட்டனர். 4200 கிராம சேவகர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. 1255பேர் இலங்கை நிருவாக சேவையிலும், பொறியியல் சேவையில் 1018, கனணி தொழில்நுட்பத்துறையில் 307 தொழில்நுட்ப உத்தியோகத்தர்க்ள 208 பதிவாளர்களாக 604 பேருக்கும் கடந்த ஆண்டு அரச நியமணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி ஆசிரியர்கள் 50ஆயிரம் பேருக்க 9500 ருபா அலவன்ஸ் வழங்கப்படுகின்றது. அத்துடன் சகன விலையில் சகல சிரேஸ்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் பைசிக்கள் கொள்வனவு செய்வதற்காக 50ஆயிரம் ருபா கடன் வழங்கப்படுகின்றது.
அத்துடன் 'அக்கார' காப்புறுதி 3இலட்சத்து 50ஆயிரத்தில் இருந்து 5 இலட்சமாக இவ் ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டில்லிருந்து இந்த ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள வித்தியாசத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்ளது சம்பள நிலுவை சரிசெய்யப்பட்டு நிலுவையுடன் வழங்கப்படும். இவர்களுக்கு மேலதிக கொடுப்பணவு 2500 ருபாவும் வழங்கப்படும். சிரேஸ்ட பிரஜைகளுக்கு கொடுப்பணவாக 2000 ருபா வழங்கப்படுகின்றது. என பொதுநிருவாக அமைச்சர் ஜோன் செனவிரத்தின தெரிவித்தார். இவ்வைபவத்தில் அமைச்சின் செயலாளர் அபயக்கோன் மற்றும் ஓய்வூதிய ஆணையாளாரும் .இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment