பந்து தாக்கி தலையில் காயம்: அவுஸ்திரேலிய விரர் பிலிப் ஹியூக்ஸ் காலமானார் -வீடியோ

நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தலையில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவுஸ்திரேலிய விரர் பிலிப் ஹியூக்ஸ் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு அவுஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டத்தில் தெற்கு அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் தலையில் பந்து தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிலிப் ஹியூக்ஸ் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவுஸ்திரேலிய அணியின் மருத்துவர் பீட்டர் புருக்ணர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விடயத்தை கூற நான் வருத்தப்படுகிறேன். சில மணி நேரத்திற்கு முன்பு தான் பிலிப் ஹியூக்ஸ் காலமானார்.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்திற்கு பிறகு அவரது சுயநினைவு திரும்பவே இல்லை. இறக்கும் முன்பு அவர் எந்த வித வலியையும் உணரவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றி இருக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது.

நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை கூறிகொள்வதோடு கிரிக்கெட்டும் பெரிய இழப்பு என்பதை தெரிவித்து கொள்கி்றேன் என்று கூறியுள்ளார்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :