வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட வாகரை தபால் நிலையம்





த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 'மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வாகரை தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ.விவேகானந்தலிங்கம் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக அஞ்சல் மா அதிபர் டி.எல்.பி.ரோஹன அபேரத்ன கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, தாபால் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் (நடைமுறைகள்) கே.கனகசுந்தரம், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகே, மற்றும் தபால் திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அஞ்சல் திணைக்களத்தின் என்பத்தெட்டு இலட்சம் ரூபா நிதியளிப்பில் இக் கட்டிடம் அமையப் பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :