அஷ்ரப் ஏ சமத்-
பொத்துவில் தலைமகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் மர்ஹூம் எம்.பி. ஏ.அஸீஸ் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு 5.11.2014 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முகைதீன் பாவா லைலா தம்பதிகளுக்கு பிறந்த 8பிள்ளைகளில் கடைசி மகனாகப்பிறந்தவர்தான் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸீஸ் அவர்களாவார்.
அன்னாரின் தகப்பன் பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர், பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் உப்புக்குதங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டது மட்டுமன்றி , பொலிஸ் தலைமை என்று சொல்லப்படுகின்ற பழங்காலத்தில் பொ.த.என்ற பதவியையும் பிரிட்டிஸ் அரசு வழங்கியது. அத்தோடு அக்கால கட்டத்தில் ஆங்கில அரசு மேற்கொண்ட அபிவிருத்தித்திட்டங்களின் ஒப்பந்தக்காரராக வேலை செய்த வகையில் ,பல்வேறு ஊர்களுக்கும் சென்ற வேளை எகலிய கொட என்ற இடத்தில் லைலா என்ற பெண்னைத் திருமணம் செய்து பொத்துவிலுக்கு அழைத்து வந்தார், இவரது தந்தை மர்ஹூம் முகைதீன் பாவா அவர்கள்.
இவ்வாறு , பொத்துவிலில் வாழ்ந்து – பிள்ளைகள் பொத்துவில் மற்றும் எகலிய கொட என்ற இடங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து வந்தனர் . அவ்வகையில், பொத்துவில் அஸீஸ் அவர்களின் ஆரம்பக் கல்வி எகலிய கொட பாடசாலைக் காலத்து நண்பர்கள் பலர் அரசியல், மற்றும் பொது துறைகளில் முன்னனியில் இருந்தார்கள் , இருக்கின்றார்கள் . இதில் குறிப்பிடக்கூடியவர்களில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி .ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் விவசாயத்துறை பிரதி அமைச்சராக இருந்த வணிகரட்ன அவர்களாவர்.
இவர் க.பொ.த(சா.த) வரை சித்தியடைந்தாலும் , எகலிய கொட ஆரம்பப்பாடசாலையில் அக்காலத்தில் நடந்த மீலாத் விழா பேச்சுப்போட்டியில் பாடசாலை மட்டத்தில் 02ஆம் இடத்தைப் பெற்றவர் என்பதோடு ,போட்டி முடிவில் ,போட்டி நிகழ்ச்சிகளுக்கு மத்தியஸ்தராகக் கடமையாற்றிய இவரது உறவினரான மௌலவி ஒருவர், இவரை அழைத்து –'நீதான் 01ஆம் இடத்தைப் பெற்றவர், நான் மத்தியஸ்தராக வந்ததால் ,
02ஆம் இடத்திற்கு வைத்தேன்.
1970 கால கட்டத்தில் பொத்துவில் - நிந்தவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் .முஸ்தபா அவர்கள் , பொத்துவில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இளைஎ10ராக சமூக சேவைகளில் அக்கறையுடன் துடிப்புடன் செயற்பட்டதை அவதானித்து தன்னோடு பொத்துவில் அபிவிருத்தி வேலைகளில் இணைத்துக் கொண்டார். அப்போது ,அம்பாறை மாவட்ட அரசியல் அதிகாரியாக இருந்த சோமரட்ணவுடன் சேவை செய்தார். ஜனாப்: .அஸீஸ் அவர்களின் சிங்கள மொழிப் புலமையைக் கவர்ந்து – முஸ்தபா அவர்களுடன் உள்ளக முரண்பாடு கொண்டு தன்னோடு இணைத்து -1970ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.கட்சி இளைஎ10ர் அமைப்பாளராக பொத்துவில் தொகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்படார்.
இவ்வாறு பொத்துவில் பிரதேசத்தின் சகல துறைகளிலும் என பல்வேறு சமூக நல இயக்கங்களில் தலைவராகச் செயற்பட்டு, மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றதன் காரணமாக 1977 பொதுத் தேர்தலில் முன்னாள்
பொத்துவில் தொகுதி ஆ.ஜலால்தீன் அவர்கள் பொத்துவில் பிரதேசப் பொறுப்பாளராக ஐ.தே.கட்சிக்க நியமித்து அமோக ஆதரவைப் பெற்று முதல் ஆவதற்கு முதன்மையாக நின்று உழைத்தார்.
இதன் நிமித்தம் அன்னாரின் துடிப்பு, சமூக சேவையை மதி;த்து ஜலால்தீன் அவர்களால் பயிர்ச் செய்கை உத்தியோகத்தராக 1978இல் நியமிக்கப்படார்.
இவ்வாறு நியமனம் பெற்றவர் நல்ல விளைச்சல் உள்ள காணிப் பகுதிகளை தெரிவு செய்து ,பொறுப்பேற்றுக் கொண்ட போது – தான் ஏதோ ஒரு வகையில் 'மக்கள் வைத்துக் கொண்ட' பொத்துவில் லகுகலைக்கு எல்லையாக உள்ள செங்காமம் , துக்கொல்ல , வேகாமம் போன்ற பிரதேசங்களைத் தானே கேட்டுப் பெற்று பொறுப்புதாரிய நியமனம் பெற்று தானும் ஒரு சேனை வெட்டி பயிர்ச்செய்கை செய்து வந்தார்.
அத்தோடு செங்காமம் ,துக்கொல்ல, வேகாமம் பகுதிகளில் விவசாய அபிவிருத்திக்கும் லகுகலை பிரதேசத்திலிருந்து பொத்துவிலுக்கு நகரும் பெரும்பான்மையினரின் சேனைப்பயிர் ஊடுருவலையும் தடுத்தமையால் பின்னாளில் , அன்னார் கௌரவ ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான அஷ;ரப் அவர்களின் இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டதும் 650குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுத்து குடியேற்றப்பட்டதன் காரணமாக ,பொத்துவில் -15 அம்பாறை கச்சேரி ஒருங்கிணைப்புக் குழுவில் கொடுத்த கோரிக்கையின் பேரில் செங்காமம் கிராமத்திற்கு .அஸீஸ் நகரம் என மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களால் பிரேரணை நிறைவேற்றப்பட்டு – பெயர் சூட்டப்பட்டது.
அன்னார் கிராம சேவகராக அமைச்சர் அஷ்ரப் அவர்களின் இணைப்பதிகாரியாக , இவ்வாறு பல்வேறு பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிராமத்திற்கு சேவை செய்த துறையில் 2002ஆம் ஆண்டு , ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரால் பொத்துவில் அமைப்பாளராக நியமிக்கப்படார.; இருவருடஙகளில் பொத்துவிலின் தேவைகளை நிறைவு செய்த போதும் , நீண்ட காலத் தேவைகளை அடையாளப்படுத்தி தொடராக
பல திட்டங்களை முன்வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில் சடுதியாக பாராளுமன்றம் களைக்கப்பட்டு அப்.பதவியை இழக்க நேரிட்டது.
பின்னர் முஸ்லீம் காங்கிரசின் தலைவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அதாவுல்லா அமைச்சரோடு இணைந்து செயற்பட்டும் அன்னாருக்கு மிகக் கூடுதல் விருப்பு வாக்கை அளித்து உதவினார்.
அதாவுல்லா அமைச்சர் அன்னாருக்குரிய கௌரவத்தை வழங்காமையிட்டு அவரிடமிருந்து விலகி வந்து மீளவும் முஸ்லீம் காங்கிரசின் தலவருடன் உடன்படிக்கையோடு சேர்ந்தார்;. எனினும் , பொத்துவில் தாய் தனது தலைமகனாக இருந்து பாதுகாத்து வந்த தாயகத்தை விட்டு சடுதியாக
2012.11.05ம் திகதி இறைவனடி சேர்ந்து விட்டார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜஊன்) அன்னாருக்;கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பொத்துவில் மக்கள் துஆ செய்கின்றனர்.
முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பி.ஏ அஸீஸ் பவுன்டேசன் பொத்துவில்.
.jpg)
0 comments :
Post a Comment