கட்டுகாஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரிக்கு இந்த வருடம் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியால் அரசியல்வாதிகள் மூலம் அதிகளவு நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், கல்லூரியின் அதிபரின் அசமந்தப்போக்கினால் கிடைத்த நிதி பயன்படுத்தப்படாமல் மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கல்லூரியின் வளர்ச்சிக்கு இன்னும் பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அதனை நிறைவேற்றுவதற்காக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைத்து நிதியைப் பெற்றுக் கொடுத்தும் கல்லூரியின் அதிபர் அதனை உரிய முறையில் பயன்படுத்தாமல் உள்ள காரணத்தினால் நிதி மீண்டும் திறைசேரிக்கு செல்லும் நிலையில் காணப்படுகின்றது.
பல பாடசாலைகள் நிதி வளங்கள் இல்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மிகவும் நெருக்கடியான நிலையில் இயங்கி வருகின்றன. ஆனால், உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரிக்கு கிடைக்கப்பெற்ற நிதியைப் பயன்படுத்தி கல்லூரியின் கல்வி வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு குறித்த கல்லூரியின் அதிபர் அசமந்தப் போக்குடன் செயற்படும் நிர்வாகத் திறனற்ற செயலால் பாடசாலை சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர்.
தங்களின் பாடசாலையின் அபிவிருத்திக்கு நிதி கிடைக்காதா? என பல பாடசாலைகள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கிடைத்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தாத அதிபரின் நிலைப்பாடு மேற்படி பாடசாலை சமூகத்தினரிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபரின் இந்த செயற்பாடு தங்களின் பிள்ளைகளின் கல்வியை பாதிப்பதாக அமைகிறது என பாடசாலையின் பெற்றோரும் கவலை தெரிவித்துள்ளனர்.
.jpg)
0 comments :
Post a Comment