2014-11-25ல் கல்முனை மாநகரசபையில் நடந்தது என்ன? Exclusive report

எம்.வை.அமீர் -

காட்சி: 01

2 மணி 45 நிமிடங்களை தாண்டிய நேரம், கல்முனைப் பிராந்தியத்தின் நவீன அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு கல்முனை மாநகர சபையை ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் இணைக்கும்இரட்டை நகர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் செய்துள்ளதை கௌரவிக்கும் நிகழ்வுக்காக பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் சகிதம் மாலையிட்டு முதல்வர் சபா மண்டபத்துக்கு அழைத்து வரப்படுகிறார்.

பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் முதல்வர் நிஸாம் காரியப்பரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. அங்கு பிரதி முதல்வரால் முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கை சம்மந்தமாக புகழ்ந்து பேசப்படுகின்றது.

பின்னர் முதல்வர் ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் தாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை கல்முனை நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹரிடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைக்கிறார்.

தான் ஜேர்மன் நியுரம்பேர்க் நகருக்குச் சென்று அங்கு பெற்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் சாராம்சங்களையும் விளக்குகிறார்.

அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிர் ஆசனத்தில் இருந்தவர்கள் முதல் எல்லோரும் மேசையில் தட்டியும் கைகளை தட்டியும் கெளரவிக்கின்றனர்.

காட்சி:02

சபையின் நவம்பர் மாதத்துக்கான சபை அமர்வு சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் ஆரம்பமாகிறது சமய அனுஷ்ட்டானங்களைத் தொடர்ந்து கடந்த மாத குறிப்புகள் தொடர்பில் உறுப்பினர்களால் திருத்தங்கள் கூறப்பட்டு அவை முதல்வரால் திருத்திக் கொள்ளுமாறு நிருவாக உத்தியோகத்தருக்கு கட்டளையிடப்படுகின்றது.

எதிர் ஆசனத்தில் இருந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஏ.எம். ரியாஸ் எழும்புகிறார் அவர் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் உள்ள வீதி ஒன்றுக்கு மறைந்த வைத்தியர் முருகேசுப்பிள்ளை அவர்களின் பெயரை வைப்பது தொடர்பான தன்னால் முமொழியப்பட்ட பிரரணை ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு முதல்வரைக் கோருகிறார் முதல்வர் இந்த அமர்வின் போது அதானை விவாதிக்க முடியாது அடுத்த அமர்வில் விவாதிக்கலாம் என கூறுகிறார்.

அந்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்கள் அமைதியாக இருக்கின்றனர் சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஏ.எம். ரியாஸுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு உறுப்பினர்களுக்குமிடையே வாய்த்தக்கம் ஏற்படுகிறது அதில் இரு தரப்பில் இருந்தும் மோசமான சொல் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

சொல் பிரயோகங்கள் உக்கிரமடைகின்றன அங்கு கைகலப்பு இடம்பெறுகிறது கதிரைகள் அங்கும் இங்கும் வீசப்படுகின்றன தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்களும் ஐக்கிய தேசியகட்சி உறுப்பினருமாக இணைந்து கைகலப்பை தடுக்க முனைகின்றனர் கைகலப்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் கதிரை ஒன்றினால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார் அதில் உறுப்பின ஏ.நஸார்தீனும் வைத்திய சாலையில் சிகிச்சை பெறுகிறார்.

காட்சி:03

கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி முதல்வர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சகிதம் விசேட பத்திரிகையாளர் மாநாட்டை முதல்வர் காரியாலயத்தில் கூட்டுகிறார் அங்கு கல்முனை மாநகர சபை அமர்வின் போது ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம். றியாஸ் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்கள் கூட்டாக் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது அதனை நாம் அனுமதிக்க மாட்டோம். இப்படியான வன்முறைகள் இந்த சபைக்கு பெரும் இழுக்காகும். எவராக இருந்தாலும் எம்மை அச்சுறுத்தி அடி பணிய வைக்க முடியாது. என்றும் தமிழ் கூடமைப்பு உள்ளிட்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கட்சி: 04

26.11.2014 கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்கின்றன, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஏ.எம். ரியாஸ் பொலிசாரால் கைது செயப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் அவர் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும் இச் செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது தகவல் கிடைத்துள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :