த.நவோஜ்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் மாகாண சபை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வாழ்வாதார உதவி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன். ஆரையம்பதி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமூகசேவை உத்தியோகஸ்தர், பயனாளி உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிதியுதவி கோரப்பட்டவருக்கு தையல் இயந்திர உதவி அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment