ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இன்று தனது 69 ஆவது பிறந்த நாள் நிகழ்வினை இன்று கொண்டாடினார். அந்தவகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆசிவேண்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பல்வேறு சமய நிகழ்ச்சிகளுக்கு இன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ளனர்.
கொழும்பிலும் அனைத்து மதங்களினதும் சார்பாக பல சமய நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெறுகின்றன. அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபடவுள்ளனர்.
1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த ஜனாதிபதி மஹிந்த ராசஜபக்ஷ தனது 24 ஆவது வயதில் இலங்கையின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இலஙகையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருந்தார்.






0 comments :
Post a Comment