காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டு வருடாந்த பரிசளிப்பு விழா-படங்கள்.

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டு வருடாந்த பரிசளிப்பு விழா 16-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் சலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது மேற்படி பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்குத் தகைமை பெற்று பிரதேச மட்டத்தில் பாடசாலையை முன்னணிக்குக் கொண்டுவரப் பங்களித்த மாணவிகள், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தகைமை பெற்ற மாணவிகள்,பல்வேறு போட்டிகளில் வலய மட்டத்தில் சாதனை படைத்த சாதனையாளர்கள்,ஆண்டிறுதிப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வகுப்பில் முதன்மை பெற்ற மாணவிகள், ஆண்டிறுதிப் பரீட்சையில் பாட ரீதியாக முதன்மை பெற்றோர் ஆகியோர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சான்றிதழும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவ ,மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை,கலாசார நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

இதில் வைத்து இப் பாடசாலையில் தற்போது கடமையாற்றிவரும் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் சலாம்,பிரதி அதிபர் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி,மற்றும் ஆசிரிய ,ஆசிரியைகள் உட்பட பாடசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்ற ஆசிரியிர்கள் ,பாடசாலை அபிவிருத்தி உதவிக்குழுவின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ஆகியார் அதிதிகளினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பிராந்திய காரியாலய செயலாளர் எம்.ரீ.எம்.கரீம் , பாடசாலை அபிவிருத்திக்குழு, பாடசாலை அபிவிருத்தி உதவிக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ,உலமாக்கள் , ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :