18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, மேலும் ஒரு தவணை பதவிக் காலத்திற்காக தேர்தலில் போட்டியிட தடை உள்ளதா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயர்நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்று இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ள விடயம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் எழுத்துமூல விளக்கத்தை சமர்பிக்க இம்மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 03 மணி வரை காலஅவகாசம் உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய, உயர் நீதிமன்ற பதிவாளரால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment