பொத்துவில் செய்தியாளர் தாஜகான் -
பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல். கலந்தர்லெவ்வை அவர்களின் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் சிறுவர்கள் மாலை சூடி வரவேற்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நடை பெற்ற வைபவத்தில் பொத்துவில் மக்கள் வங்கி 100 சிறுவர்களுக்கான பரிசில்களையும் பாராட்டினையும் வழங்கி கௌரவித்தனர்.
தரம் 05 மாணவன் எம்.ஏ.எம். அப்துல் றஹ்மானின் சிறுவர் உரிமை பற்றிய உரை எல்லோராலும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல். கலந்தர்லெவ்வை அவர்கள் சிறுவர் துஸ்பிரயோகம் பற்றி உரையாற்றினார்.
சிறுவர்களுக்கான தாக சாந்தியினை அப்தால் கூல் ஸ்பொட் வழங்கியது.
பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாரக் மற்றும் வித்தியாலயத்தின் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment