மீரா அலி ரஜாய்-
உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழும் முஸ்லிம் மக்கள் புனித "ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர் . அதனடிப்டையில்,
லண்டன், மில்ட்டன் கீன்ஸ் மற்றும் ஹெமல் ஹெம்ப்ஸ்டட் நகரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடினர். இதில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மௌலவி எம். கலாமுல்லாஹ் அவர்கள் மில்ட்டன் கீன்ஸ் நகரிலும் மௌலவி அதாவூர் ரஹ்மான் அவர்கள் ஹெமல் ஹெம்ப்ஸ்டட் நகரிலும் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்கள் .
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சாந்தி, சமாதானமாக வாழ வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் சாந்தி சமாதானத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் பிராத்தித்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனை SLMCFMK , SLMA HEMEL என்கின்ற அமைப்புகள் ஒழுங்கு செய்திருந்தன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment