பொதுபலசேனா விடுத்துள்ள வேண்டுகோளை ஐக்கிய தேசிய கட்சி கருத்தில்கொள்ளும்- திஸ்ஸ அத்தநாயக்க

னாதிபதி தேர்தலுக்கு முன்பாக தங்களுடைய கொள்கைதிட்டங்களை பரிசீலிக்குமாறு பொதுபலசேனா விடுத்துள்ள வேண்டுகோளை ஐக்கிய தேசிய கட்சி கருத்தில்கொள்ளும் என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தனது உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள கொள்கைகளை ஏற்க்கும் கட்சிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க தயார் என பொதுபலசேனா தெரிவித்துள்ளமை குறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்க்கு எதிராக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து வலுவான கூட்டணியொன்றை அமைப்பதே எமது நோக்கம். ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரடடடுவதே எங்களது நோக்கம், இதன் காரணமாக தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக பொதுபலசேனாவின் வேண்டுகோள்களை நிச்சயமாக பரிசீலிப்போம், என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :