கடந்த சில தினக்களுக்கு முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேரடி விவாதம் ஒன்றுக்கு வரும்படி அவ் அமைப்பின் பொதுசெயலாளர் ஞான சார தேரருக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கும் வகையில்பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞான சார தேரருக்கு கடிதம் ஒன்றினையும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில்....
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞான சார தேரர் நேத்தோலிகளுடன் என்னால் விவாதம் செய்யமுடியாது என குறிப்பிட்டுள்ள அதேவேளை முஸ்லிம் சமுகத்தில் திமிங்கலங்கள் இருந்தால் தைரியமாக விவாதத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
சு.ஒ
0 comments :
Post a Comment