கல்முனை பிரதேச செயலகத்தினால் சர்வதேச சிறுவர்,முதியோர் தினம் அனுஷ்டிப்பு



மொஹமட் ஹாத்தீம் 

ல்முனை பிரதேச செயலகத்தினால் சர்வதேச சிறுவர் தினமும், முதியோர் தினமும் இன்றய தினம் அனுஷ்டிக்கப்பட்டன. அந்தவகையில் முதியோரை கௌரவப்படுத்தும் பொருட்டு
அவர்களுக்கு பேருந்துகளில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்றகருத்தினை வழியுருத்தி கல்முனை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டன. அதன் பின்னர் கல்முனை வலய பாலர் பாடசாலையில் சிறுவர்களை கெளரவிக்கும் பொருட்டு சிறுவர் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிகழ்வுகளில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்களராச்சி, உளவள ஆலோசகர்களான றினோஸ் ஹனீபா, ஏ.ஆர் தஹ்லான், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.அன்சார், எப்.ஹபீபா, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ நபாயிஸ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஓ.கே சரிபா மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ல் முஸ்பிரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :