யு..இஸ்ஹாக் -
சிறுவர்கள் உயிர்வாழும் உரிமைக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள் நாட்டு யுத்தங்களாலும்> வீட்டு யுத்தங்களாலும் சிறுவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு பாதிக்கப்படுகின்றனர். உரிமைகள் மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ்வதற்கும் இந்த இரு யுத்தங்களே காரணமாக அமைகின்றது.
இவ்வாறு கல்முனை மாவட்ட நீதி மன்ற நீதிபதி எம்.பீ.முகைதீன் கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் இடம் பெற்ற சிறுவர் தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
சிறுவர் தினத்தையொட்டி சிறுவர் நன் நடத்தை திணைக்களமும் இ கல்முனை பொலிஸாரும்இ டீப் லிங் அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தினக் கொண்டாட்டம் நன் நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி எஸ்.சிவகுமார் தலைமையில் நடை பெற்றது.
அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாவட்ட நீதபதி எம்.பி.முகைதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சிறுவர்கள் உயிர் வாழும் உரிமைக்கு போராடிக் கொன்டிருக்கின்றனர். யுத்தம் இடம் பெறுகின்ற இடங்களில் கூடுதலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர் அதே போன்று வீடுகளில் பெற்றௌருக்கிடையே நடை பெறுகின்ற வீட்டு யுத்தத்திலும் சிறுவர்களே பாதிக்கப் படுகின்றனர்.
ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து உருவாகும் சிசுவூக்கும் உரிமை இருக்கிறது கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைதான் விசேட தேவையுடைய அங்கவீனக் குழந்தைகளை உருவாக்கின்றது. வீட்டு யுத்தத்தால் கருவில் இருக்கும் சிசு பாதிக்கப்பட்டு அதற்கான உரிமைகள் மறுக்கப் படுகின்றன. வீட்டு யுத்தத்தை குறைத்தால் அங்கவீனக் குழந்தைகளையும் குறைக்கலாம் என மாவட்ட நீதிபதி அங்கு தெரிவித்தார்.
இங்கு பேசும் போது ஒருவர் தெரிவித்தார் கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகள் அங்கவீனர்களாக காணப்படுகின்றனர் என்று இலங்கையில் நடை பெற்ற யுத்தமும் யுத்தம் காரணமாக ஏற்பட்ட வறுமையூம் இதற்கான காரணமாக அமையலாம் என்றார். ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும் போது அவருக்கான போஷாக்கு உணவூ இமகிழச்சியான வாழ்க்கை பயமற்ற சூழல் என்பன ஏற்படுத்தப்பட்டு குடும்பத்தில் சந்தோஷம் இருந்தால் அங்கவீனப் பிறப்பைக் குறைக்கலாம்.
உலகம் முழுவதும் சட்டத்தையும் மீறிய சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகின்றன 14 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வேலை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் இதனையும் மீறி சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகின்றன. சிறுவர் துஸ்பிரயோக சம்பவம் இடம் பெறுவதை பொலிஸாரோ இநீதி மன்றமோ உடன் தடுத்து நிறுத்தி விட முடியாது தண்டனை மாத்திரமே வழங்க முடியும் சிறுவர்களுக்கெதிரான துஷபிரயோகங்கள் இடம்பெறுகின்றது 14 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வேலை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் இதனையும் மீறி சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன ஒரு துஷ்பிரயோகம் இடம்பெறுவதை பொலிஸாரோ நீதிமன்றமோ உடன் தடுத்து நிறுத்திவிட முடியாது. தண்டனை மாத்திரமே வழங்க முடியும் துஷ்பிரயோகத்தை தடுக்கும் விடயத்தில் சிறுவர்களின் பெற்றௌர் விழிப்புடன் இருக்க வேண்டும்
ஆரோக்கியமான உடலில் இருந்துதான் ஆரோக்கியமான சிந்தனைகள் வெளிவரும் அதன் மூலம் தான் நல்ல செயற்பாடுகளும் நடைபெறும் சிறுவர்களை ஆரோக்கியமாக பேணிப்பாதுகாப்பது பெற்றௌரது கடமையாகும் அவர்களது ஆரோக்கிய வாழ்யுக்கான உணவு உடை கல்வித்தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் அன்றாடம் எதையாவது உண்ணுகின்றௌம் எதையாவது உடுக்கின்றௌம் அதே போன்று எமது நாட்டில் இலவசக்கல்வி இருக்கும்வரை சிறுவர்களைக் கற்பிப்பதற்கும் தடை இல்லை இலங்கையில் கல்வி கற்க முடியாதென்று கூற முடியாது. கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையல்ல எமது நாட்டைப் பொறுத்தவரை தனியார் ரியூசன் வகுப்புக்களுக்கு போக வேண்டிய அவசியமில்லை அங்குதான் கூடுதலான சர்ச்சைகள் எழுகின்றன என்றார்.
சிறுவர்களுக்கான பாலியல் தொந்தரவுகள் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றச் சாட்டில் பெற்றௌரும் உறவினர்களும் அயலவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் சிறுவர் இல்ல பொறுப்பாளர்களுமே குற்றத்துக்குள்ளாகின்றனர். சிறுவர்களை வாழ விடுங்கள் அவர்களது குரலை ஓங்க விடுங்கள் பெற்றௌர்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே துஸ்பிரயோக செயல்களைத் தடுக்கலாம். அத்துடன் ஆசிரியர்கள் சூழலில் வசிப்போர் விழிப்புடன் செயற்பட்டு சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோக செயற்பாடுகளைத் தடுக்கலாம்.
சட்டங்கள் பல இருந்தாலும் துஸ்பிரயோக குற்றச் செயல்கள் நடைபெற்று முடிந்ததன் பின்னர்தான் நடவடிக்கை எடுக்க சட்டங்கள் வழிவகுக்கின்றன. மற்றும் சமூக சீர் கேடுகளால் சிறுவர்கள் பாதிக்கப் படுகின்றனர். சிசுக்கள் வீதி ஓரங்களில் வீசப்படுகின்றன. சமூக சீர்கேடு தவிர்க்கப்பட்டால் சிறார்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் குறைவாக உள்ளது. பெரியவர்கள் உணர்ந்து செயற்படுவதன் மூலம் சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். அவர்களது வாழ்வு சிறப்படைந்தால் மட்டுமே சிறுவர்கள் இந் நாட்டுக்கு நல்லது எதையாவது செய்ய முடியும்.
சிறுவர்கள் உயிர்வாழ்வதற்கான உரிமையை மறுக்காதீர்கள் அவர்களை வாழ விடுங்கள் அவர்களது விடயத்தில் பாதையில் பாடசாலையில் வைத்தியசாலையில் பொலிஸ் நிலையத்தில் நீதி மன்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டு அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். பேற்றோரும் ஆசிரியர்களும் சில விடயங்களில் கண்மூடித் தனமாக நடந்து கொள்வது நிறுத்தப் படவேண்டும். செய்ய முடியாத விடயத்தை அவர்கள் மீது திணித்து சுமையைக் கொடுக்க முடியாது. சிறுவர்களை வேலைக்கமர்த்தும் விடயத்தில் எமது நாட்டைப் பொறுத்தவரை தீர்வு இல்லை. சிறுவர்கள் கடினமான வேலை செய்வதைக் கண்டால் உடனடி நடவடிக்கை எடுங்கள் என பொலிஸாரை நீதிபதி கேட்டுக் கொண்டார். அத்துடன் வசதி வாய்ப்புகளுடன் காணப்படுகின்ற குடும்பத்திலுள்ள சிறுவர்கள் தொழிலுக்குட்படுத்தப் பட்டிருந்தால் பிள்ளைகளுக்கும் பெற்றௌருக்கும் எதிராக நடவடிக்கை எடுங்கள் எனவும் பொலிஸாருக்கு நீதிபதி தெரிவித்தார்
சிறுவர்களை வாழ விடாமல் தடுப்பவர்களும். அவர்களை துஸ்பிரயோகத்துக்குட்படுத்துபவர்களும் முதியவர்களே சிறியோருக்கு சகல மட்டத்திலும் உரிமை வழங்கி அவர்களை வாழ விடுவதன் மூலம் அவர்களது நாளைய உலகம் நன்றாக அமையூம் என கல்முனையில் நடை பெற்ற சிறுவர் தின உரையில் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் தெரிவித்தார்
.jpg)
0 comments :
Post a Comment