வன்னி மக்களுக்கு வீடமைப்புத்திட்டத்திற்கு பாக்கிஸ்தான் அரசு வழங்கும் 220 மில்லியன்ருபா வுக்கு மேலதிகமாக தேவைப்படும் 130 மில்லியன் ருபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒதுக்குவதற்கு முன்வந்துள்ளார். இது தொடர்பாக அதிகார அறிவித்தலை அமைச்சர் பசில் ராஜபக்ச மன்னார் புதுக்குடியிருப்பில் வைத்து அறிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் நிதியுதவியுடன் வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள வீடமைப்புத்திட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி அறிவித்தலை அமைச்சர் பசில் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பாக்கிஸ்தான் அரசுக்கு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கடிதம் எழுதி எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே இவ் வீடமைப்புத்திட்டம் வன்னி மக்களுக்கு கிடைக்கப்பெற்றது.
இத்திட்டத்தினைஅவர் பெரும் கஸ்டத்திற்கு மத்தியில் முயற்சிசெய்து இங்கு கொண்டு வந்ததை நான் அறிவேன், அமைச்சர் றிசாத் அகதியாக வந்து வன்னி மக்களது மீள்குடியேற்றத்திலும் அவர்களது சகல அடிப்படை திட்டத்திற்கும் மிகவும் பாடுபட்டுவருகின்றார். அவரின் செயற்பாடுகளின் மத்தியில் இதனை சிலர் இனவாதம், மதவாதம் பூசி அவரது முயற்சிகளுக்கு சதிசெய்ய முற்படுகின்றனர்.
வன்னி முஸ்லீம் கொலனி ஒன்றை நிர்மாணிப்பதாகவும் பொய் கூறி பேரினவாத இனவாத குழுவொன்று சிங்கள தமிழ் ஆங்கில ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்பி அமைச்சரின் பெயருக்கு அண்மைக்காலமாக களங்கப்படுத்தி வருகின்றனர். இவர்களது எந்த தடைவந்தாலும் அதனை நாம் முறியடிப்போம். இதனையிட்டு பெரிதும் விசனம் அடைகின்றேன்.
பயங்கரவாதத்தின் இறுதிக் கட்டத்தின் தமிழ் மக்களை குடியேற்றி ஜனாபதிக்கும் இந்த அரசுக்கும் பெருமை தேடி தந்த அமைச்சரின் சேவையை நான் பாராட்டுகின்றேன் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

0 comments :
Post a Comment