316 குடும்பங்களுக்கு அமைச்சர் மன்சூரின் வாழ்வாதார உதவி அமைச்சர் ஹக்கீமால் வழங்கிவைப்பு-படங்கள்











அபூ இன்ஷப்-

ம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வழுகின்ற குடும்பங்குளுக்கு கிழக்கு மாகண சுகாதார சுதேச வைத்தியத்துறை, சமூக சேவை, சிறுவர் பராமரிப்பு, விளையாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கிழ் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (23) வியழக்கிழமை மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மறைந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தபாக தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷரபின் ஞாபகாத்தமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வைபவம் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூரின் தலைமையில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸ் தெசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.எம்.தவம், பிரதேச சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஐ.எல்.நஜீம் ஆகியோரும்.

விஷேட அதிதியாக கிழக்கு மாகண சுகாதார சுதேச வைத்தியத்துறை, சமூக சேவை, சிறுவர் பராமரிப்பு, விளையாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜே.ஹூசைனுத்தீன்; கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, உலமாசபைத் தலைவர் அப்துல் காதர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜாபிர், நீதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஹூபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தின் போது சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சமுக சேவைகள் அமைப்புக்களுக்கு அலுவலக உபகரணங்கள், முன்பள்ளி பாடசாலைகளுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், பள்ளிவாசல்களின் பௌதீக வள அபிவிருத்திக்கான நிதி வழங்கல் என்பன இடம் பெற்றது.

அத்துடன் 90 குடும்பங்களுக்கு வீடு திருத்துவதற்கான சீமெந்துப் பொதிகளும், 53 செங்கல் உற்பத்தியாளர்களுக்கான பொருள் உதவிகளும்;, 53 குடும்பங்களுக்கு முக்கால் இஞ்சி கருங்கல் உடைப் போருக்கான பொருள் உதவிகளும், 118 வறிய குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புக்கள் வழங்கல் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :